முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ப்ளஸ் டூ, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ப்ளஸ் டூ, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள்.

  • Last Updated :

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள்  இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை  அனுப்ப இன்றே கடைசி நாள் என்பதை கவனத்தில் கொள்க.

அறிவிப்பு வெளியான நாள் : 24-11-2021

நிறுவனம்: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்

1. பணி : ஸ்டாப் நர்ஸ் - Staff Nurse ( C-5)

காலி பணியிடங்கள் : 07

தகுதி : ப்ளஸ் 2 தேர்ச்சியுடன் ஜெனரல் நர்சிங் மிட்வைஃப்ரி ( General Nursing and midwifery) பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.37,383 வழங்கப்படும்

2. பணி : பிசியோதெரபிஸ்ட் - Physiotherapist (C-5)

காலி பணியிடங்கள்:  01

தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சியுடன் பிசியோதெரபியில் (Physiotherapy ) 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 37383

3. பணி: பார்மஸிஸ்ட்  - Pharmacist (C-5)

காலி பணியிடங்கள் : 01

தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சியுடன் டி -பார்ம் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 37,383

4. பணி: டிரஸ்சர்  Dresser –( B-4)

காலிப்பணியிடங்கள் : 02

தகுதி : ப்ளஸ்  2 தேர்ச்சியுடன் முதலுதவி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 35,555

வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி, 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : hal-india.co.in நிறுவனத்தின் இணையதளத்தில் Careers பகுதியில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-12-2021

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படும். தேர்வானது பெங்களூருவில் நடைபெறும். இதுகுறித்து முறையாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்

 விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.200 பாரத் ஸ்டேட் வங்கியில் (SBI) செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

top videos

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண : https://meta-secure.com/HAL-mh2021/pdf/Notification.pdf இந்த லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்

    First published:

    Tags: Employment, Employment news, Job Vacancy, Recruitment