ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத்துறையில் வேலை

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத்துறையில் வேலை

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

விண்ணப்பதாரர் தமிழில் நன்கு எழுத படிக்காத தெரிந்திருக்க வேண்டும். மேலும், இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்

  • 2 minute read
  • Last Updated :

சென்னை பார்த்தசாரதி திருக்கோயிலில் உதவி மின்பணியாளர், அலுவலக உதவியாளர், கடைநிலை ஊழியர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை  இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 11

பணி  நிலவரம்:

உதவி மின்பணியாளர்கல்வித் தகுதி:மின்/மின்கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மின் உரிம வழங்கல் வாரியத்திடமிருந்து 'H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்எண்ணிக்கை: 1
அலுவலக உதவியாளர் 1-8 வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்1
கடைநிலை ஊழியர் 1-8 வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்2
திருவிலகுதமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்2
இரவுக் காவலர்தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்1
உதவி கைங்கர்யம்தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்ஆகமப்பள்ளி அல்லது வேத பாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்(தென்கலை வைணவ பிராமணர்கள் மட்டும் )1
சன்னதி தீவட்டிதமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்திருக்கோயிலில் தீவட்டி பணி பார்த்த அனுபவம்தீவட்டி தயாரித்து பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்1
உதவி பரிச்சகர்தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்இத்திருக்கோயிலின் பழக்கவளங்களுக்கு கேற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்1
கால்நடை பராமரிப்புதமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 1

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகளுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

துணைஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி,

சென்னை-5,

விண்ணப்பப்படிவம்  மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in மற்றும் parthasarathy.hrce.tn.gov.in என்ற  இணையதாத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பணியிட விவரங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை  அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து பணியிடங்களுக்கு தொடர்புடைய பனி சம்மந்தமாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பதாரர் தமிழில் நன்கு எழுத படிக்காத தெரிந்திருக்க வேண்டும். மேலும், இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

அலுவல உதவியாளர் மற்றும் கடைநிலை ஊழியர் ஆகிய பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவு பெற்றிருப்பவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பத்தார் 01.04.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.05.2022

விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதார்களும் உடல்தகுதி சான்று பெற்று அதன் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அணைத்து பணியிடங்களுக்கும் காவல்துறை சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

Published by:Salanraj R
First published:

Tags: Jobs