போட்டித் தேர்வுகளில் இனி ‘நெகட்டிவ்’ மார்க் கூடாது- உயர் நீதிமன்றம் உத்தரவு

’சிபிஎஸ்சி மற்றும் பிற போட்டி தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்’

போட்டித் தேர்வுகளில் இனி ‘நெகட்டிவ்’ மார்க் கூடாது- உயர் நீதிமன்றம் உத்தரவு
exams (Representative image)
  • News18
  • Last Updated: February 1, 2019, 8:07 PM IST
  • Share this:
போட்டித் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சிபெறாத நெல்சன் என்ற மாணவர், மறு மதிப்பீடு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், பிரதான தேர்வில் 50 மதிப்பெண் எடுக்க வேண்டிய நிலையில் 47 மட்டுமே எடுத்ததால் அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை 2013-ம் ஆண்டு விசாரித்த நீதிபதி சசிதரன், மாணவன் நெல்சனை அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவும் விடைதாளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.


இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, கல்வியில் முன்னேறிய கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட நெகடிவ் மார்க் முறையை பின்பற்றி தேர்வர்கள் துன்புறுத்தப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, சிபிஎஸ்சி மற்றும் பிற போட்டி தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் பார்க்க: பட்ஜெட் 2019... விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய்
First published: February 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading