மத்திய அரசு நிறுவனத்தில் 169 பயிற்சிப் பணியிடங்கள்!

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 10.

news18
Updated: December 5, 2018, 10:51 PM IST
மத்திய அரசு நிறுவனத்தில் 169 பயிற்சிப் பணியிடங்கள்!
ஹெச்இசி நிறுவனத்தில் பயிற்சிப் பணி
news18
Updated: December 5, 2018, 10:51 PM IST
மத்திய அரசு நிறுவனமான ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (Heavy Engineering Corporation Limited) நிறுவனத்தில் 169 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், ஜார்க்கன்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ளது. இந்நிறுவனத்தில் அப்பரன்டிஸ் பயிற்சிக்கு 169 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில், பட்டதாரி பிரிவின் கீழ் 73 இடங்களும், டெக்னீசியன் பிரிவின் கீழ் 96 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 30-11-2018 நிலவரப்படி 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், புரொடக்‌ஷன், மெட்டலர்ஜி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி பிரிவுக்கும், டிப்ளமா படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் டெக்னீசியன் பிரிவுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500-ம், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் ரூ. 125-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 10. மேலும் விவரங்களுக்கு http://hecltd.com/jobs-at-hec.php, https://eapplicationonline.com/HECHRDHTI2018/Document/Advertisement.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Loading...

Also watch

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...