இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் நேரடி தலைமைக் காவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்:
தலைமைக் காவலர் (அமைச்சுப்பணி) நேரடி நியமனம்:
எண் |
நியமனம் |
பொதுப் பிரிவு |
எஸ்சி |
எஸ்டி |
ஓபிசி |
EWS ஒதுக்கீட்டு பிரிவினர் |
மொத்தம் |
1. |
தலைமைக் காவலர் (அமைச்சுப்பணி) நேரடி நியமனம்: ஆண்கள் பிரிவு |
55 |
22 |
20 |
24 |
14 |
135 |
2. |
தலைமைக் காவலர் (அமைச்சுப்பணி) நேரடி நியமனம்: மகளிர் பிரிவு |
10 |
04 |
03 |
04 |
02 |
23 |
தலைமைக் காவலர் (அமைச்சுப்பணி) துறைத் தேர்வுகள்:
தலைமைக் காவலர் (அமைச்சுப்பணி) நேரடி நியமனம்: துறை தேர்வுகள் (இந்தோ தீபத் படைப் பிரிவில் பணியாற்றும் வீரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் ) |
இடஒதுக்கீடற்ற இடங்கள்
74
|
எஸ்சி
08
|
எஸ்டி
08 |
மொத்தம்
90 |
பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது. நிர்வாகக் காரணங்களினால் அதிகரிக்கவோ மாற்றியமைக்கவோ கூடும். அவ்வப்போதைய நிலவரங்களை https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
ஆன்லைன் மூலமாக மட்டுமே இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். https://recruitment.itbpolice.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி 07.07.2022 (இரவு 11.59 மணி). ஜூன் 8ம் தேதியில் இருந்து இணையவழி விண்ணப்ப செயல்முறை தொடங்கும் என்று தெரிவிக்கபபட்டுள்ளது.
சம்பளம்:
சம்பள ஏற்ற நிலை 4 : 25,500 - 81,100 (ஏழாவது ஊதியக் குழு)
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கத் தகுதிகள்:
நேரடி நியமன பதிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01/01/2022 அன்று, 25 வயதுக்கு கீழ் இருக்க கூடாது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். மேலும், விண்ணப்பதாரர் 10,+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி சார்ந்த திறன் இருக்க வேண்டும்.
துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இந்தோ தீபத் படைப் பிரிவில் பணியாற்றும் வீரர்கள் 01/01/2022 அன்று 35க்கு கீழ் இருக்கக் கூடாது. மேலும், விண்ணப்பதாரர் 10,+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி சார்ந்த திறன் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை: உடல்தகுதித் தேர்வு, உடற்சோதனை தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, திறனறிவு தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.
இந்தோ-திபெத் காவல்படை:
இது எல்லையை பாதுகாக்கும் ஒரு காவல்படையாகும். அதிக உயரமான பகுதிகளில் செயல்படுவதில் சிறப்பு வாய்ந்தது. இந்திய-சீனா எல்லைப் பகுதிகளை காக்கும் பணிக்காக இது பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.