அரசு வேலைக்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

அரசுப் பணி மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைகள், தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் பெற வேண்டியது என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: February 23, 2019, 3:54 PM IST
அரசு வேலைக்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: February 23, 2019, 3:54 PM IST
அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அட்ரின் போஸ்கோ என்பவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்கனவே 56 நாட்கள் சிறையில் உள்ள அட்ரின், இன்னும் நான்கு நாட்களில் சட்டப்பூர்வ ஜாமீன் பெற உரிமை உள்ளதாகக் கூறி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


அந்த உத்தரவில், அரசுப் பணி மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைகள், தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் பெற வேண்டியது என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு வேலையை பணம் கொடுத்து மறைமுகமாக பெற்றுவிடலாம் என்ற மனப்பாங்கை தடுத்து நிறுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, அரசு வேலைக்காகவும், மருத்துவ சேர்க்கைக்காகவும் யாரும் பணம் கொடுக்கும் செயலில் ஈடுபடக் கூடாது எனவும், அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட வேண்டும் என, டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

Also see...

Loading...

First published: February 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...