சிலம்பம் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு தெரிவித்துள்ள ஹேப்பி நியூஸ்

சிலம்பம்

வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டை 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை.

  • Share this:
வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டை 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக அரசுத்துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியிடங்களில், விளையாட்டு வீரர்களுக்காக 3 சதவீத இட ஒதுக்கீடும், பொதுத்துறை நிறுவனங்களில் தலை சிறந்த விளையாட்டு வீரர்களை பணியமர்த்துவதற்கான வழிவகையும் அரசு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற, கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் உள்ள 46 விளையாட்டுகள் மற்றும் ஒலிம்பிக் அல்லாத 4 விளையாட்டுகளான ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ் கபடி மற்றும் வுஷு ஆகிய விளையாட்டுகள் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்க தகுதியுடைய விளையாட்டுகள் ஆகும்.

இந்நிலையில், வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டை 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் மேற்கொள்வதற்கு உரிய பணியிடங்களை கண்டறிந்து பணி நியமனம் மேற்கொள்ள அனைத்துத் துறைத் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Must Read : பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை - ஆச்சரியம் தெரிவித்த பொன்முடி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பணி நியமனங்கள் மற்றும் தமிழ்நாடு வன சார்நிலைப் பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் மாணவர் வனக்காப்பாளர் வன காவலர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களில் 10 சதவிகித இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Suresh V
First published: