மத்திய அரசின் விமானங்கள் தயார் செய்யும் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்- இல் பல்வேறு பிரிவுகளின் பணிகளுக்குப் பயிற்சி பணியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சி காலத்தில் உதவித்தொகை வழங்கப்படும். நிரந்தர பணிநியமனத்திற்குப் பின்பு மாத ஊதியம் வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | கல்வித்தகுதி |
Diploma Trainee (Electronics)(D6) | 4 | Electronics &Communication Engineering டிப்ளமோ |
Technician Trainee (Electronics)(C5) | 5 | ITI+NAC/NCTVT (Electronics) |
Technician Trainee (Turner)(C5) | 1 | ITI+NAC/NCTVT (Turner) |
Technician Trainee (Fitter)(C5) | 1 | ITI+NAC/NCTVT (Fitter) |
Stores/Purchase Assistant Trainee(C5) | 3 | வணிகம்/கலை/அறிவியல் பாடங்களில் டிகிரி |
Assistant Admin Trainee(C5) | 2 | Commercial and Computer Practice பாடத்தில் டிப்ளமோ மற்றும் 1 வருடத் தொழிற்பயிற்சி |
Assistant Accounts Trainee(C5) | 1 | வணிகத்தில் டிகிரி |
Assistant-B (Nursing) Trainee(C5) | 2 | General Nursing பாடத்தில் டிப்ளமோ |
Lab Technician Trainee(B4) | 1 | Medical LaboratoryTechnology 3 வருட டிப்ளமோ |
வயது வரம்பு :
01.10.2022 நாள் வரை அதிகபட்சமாக 28 வயது இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது 33.
உதவித்தொகை மற்றும் சம்பளம்:
பணி நிலை | உதவித்தொகை | இதரத் தொகை | சம்பளம் |
D6 | ரூ.31,004 | ரூ.6,210 | ரூ.23,000-95,000 |
C5 | ரூ.29,656 | ரூ.5,940 | ரூ.22,000-90,000 |
B4 | ரூ.28,308 | ரூ.5,670 | ரூ.21,000-85,000 |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்களைத் தேர்வு செய்வர்.
Also Read : மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் : என்.எல்.சியில் 213 பணியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://hal-india.co.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://exmegov.com/index
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 08.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Employment, Jobs