HAL நிறுவனத்தில் காலியாக உள்ள 121 அப்பரன்டிஸ் பணியிடங்கள்

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் டிரேடு அப்பரன்டிஸ் பயிற்சிப் பணிக்கு 121 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

news18
Updated: October 28, 2018, 7:53 AM IST
HAL நிறுவனத்தில் காலியாக உள்ள 121 அப்பரன்டிஸ் பணியிடங்கள்
ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் 121 அப்பரன்டிஸ் பணியிடங்கள்
news18
Updated: October 28, 2018, 7:53 AM IST
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் நாட்டின் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும்.

ராணுவத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் டிரேடு அப்பரன்டிஸ் பயிற்சிப் பணிக்கு 121 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எந்தெந்த பிரிவுகள்: எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், ஏ.சி. மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், டிராஃப்ட்ஸ்மேன், வெல்டர், பெயின்டர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பு முடித்தோர், ஐ.டி.ஐ. படித்து என்.டி.சி. சான்றிதழ் பெற்றோர் இந்த பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: அக்டோபர் 30 நிலவரப்படி, 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: தகுதி வாய்ந்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு டிசம்பர் 10 முதல் 20-ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்த்தல் மற்றும் திறமை சோதித்தல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடைசி தேதி: விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை இமெயில் வாயிலாக செவ்வாய்க்கிழமைக்குள் (அக்டோபர் 30) அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://hal-india.co.in/Common/Uploads/Resumes/924_CareerPDF1_Notification%20%20for%20Trade%20Apprentices%20ITI%20%202018-19.pdf மற்றும் http://hal-india.co.in/ ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch

First published: October 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...