ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

2000க்கும் அதிக மாணவர்களுக்கு வேலை.. கேம்பஸ் இண்டர்வியூவில் சாதனை படைத்த அண்ணா யுனிவர்சிட்டி!

2000க்கும் அதிக மாணவர்களுக்கு வேலை.. கேம்பஸ் இண்டர்வியூவில் சாதனை படைத்த அண்ணா யுனிவர்சிட்டி!

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Anna University Campus Placement: பணி வாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 75 சதவீதம் அளவிற்கு முதன்முறையாக  கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில்  உயர்ந்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் வளாக வேலை வாய்ப்பில் தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை  முதன்முறையாக 2 ஆயிரத்தை  கடந்துள்ளது.  இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 75 சதவீதம் உயர்வாகும்.

வளாக வேலைவாய்ப்பு மூலம் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை படிக்கும் போதே  பெற்று தரும் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் முன்னிலை வகிக்கின்றது. ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 50 சதவீதம் பேர் வளாக வேலை வாய்ப்பு மூலம் பல முன்னனி ஆட்டோமொபைல்,மென்பொருள் உள்ளிட்ட  நிறுவனங்களுக்கு பணிக்கு செல்கின்றனர்.

அந்த வகையில்  கடந்த ஆண்டு  துவங்கி இந்த ஆண்டு அக்டோபர் வரை  அண்ணா பல்கலைக்கழக வளாக வேலை வாய்ப்பு மூலம் பணி வாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 75 சதவீதம் அளவிற்கு முதன்முறையாக  கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில்  உயர்ந்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது..

அண்ணா பல்கலைக்கழக வளாக வேலைவாய்ப்பு:

2019-2020ம்  ஆண்டு1144
2020-2021ம் ஆண்டு1218
2021-2022ம் ஆண்டு2116

ஊதிய நிர்ணயம்:

அதே நேரத்தில் ஊதியம் அதிகம் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கடந்த 2020-2021ம்  ஆண்டு 20 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஊதியம் அளித்த நிறுவனங்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில், 2022-2023ம் ஆண்டில்  அந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மென்பொருள் அல்லாத நிறுவனங்கள்:

வளாக வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டினைக் காட்டிலும்  மென்பொருள் அல்லாத நிறுவனங்கள் அதிக அளவு பங்கேற்றதுடன் வேலைவாய்ப்பு வழங்கும் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு 15 நிறுவனங்கள் 153 மாணவர்களுக்கு  வேலை வாய்ப்பு வழங்கியது.  நடப்பாண்டு அக்டோபர்  வரை 33 நிறுவனங்கள் 287 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளன.

வளாக வேலைவாய்ப்பு முகாமில் TCS,Infosys,caterpillar,capgemini ,siliconlab,D-shaw உள்ளிட்ட முன்னனி நிறுவனங்கள் பங்கேடுத்துள்ளன. ஆக வேலைவாய்ப்பு மூலம் அதிகபட்சமாக 36 லட்சமும் குறைந்தபட்சமாக 7 லட்சமும் ஊதியமாக மாணவர்களுக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: இந்தியாவில் கணிசமாக அதிகரித்த ஆன்லைன், தொலைதூர கல்விமுறையில் பயில்வோர்களின் எண்ணிக்கை - காரணம் என்ன?

கொரொனொ காலகட்டத்தில் உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை இருந்தபோதிலும் கொரொனொ காலக்கட்டத்திற்கு பிறகு தற்போது  தொழில் நிறுவனங்கள்,மென்பொருள் நிறுவனங்கள்  வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் வாசிக்க: பிளஸ்2 முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு HCL-ல் பணிபுரிய வாய்ப்பு - பயிற்சியுடன் கூடிய வேலை!

அதே நேரத்தில் பல தனியார் நிறுவனங்கள் வளாக வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுத்த மாணவர்களை இதுவரை முழுவதுமாக பணியில் அமர்த்த வில்லை என்கிற கருத்தும் ஒரு பக்கம் முன் வைக்கப்படுகிறது.

Published by:Salanraj R
First published:

Tags: Anna University, Tamil Nadu Government Jobs