ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக அரசு கல்லூரிகளில் 1895 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்கள்.. விண்ணப்பம் தொடக்கம்..!

தமிழக அரசு கல்லூரிகளில் 1895 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்கள்.. விண்ணப்பம் தொடக்கம்..!

கெளரவ விரிவுரையாளர்

கெளரவ விரிவுரையாளர்

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியலில் உள்ள 1895 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் 4000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேலும் 1895 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தற்காலிகமாக நிரப்பும் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.

பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டு நெறிமுறைகளின் படி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேவையான விவரங்கள் இதோ.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்எண்ணிக்கை
கெளரவ விரிவுரையாளர்1895

கல்வித்தகுதி:

55% சதவீத மதிபெண்களுடன் முதுகலைப் பட்டம், NET/SLET/SET தேர்ச்சி அல்லது Ph.d தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கள நிலவர விவரங்கள்:

கெளரவ விரிவுரையாளர் தேவைப்படும் பாடப்பிரிவுகள் மற்றும் மாவட்ட வாரியாக பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கில பாடத்தில் அதிகப்படியாக 358 பணியிடங்கள் உள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழில் 317 பணியிடங்கள், வணிகத்தில் 150 பணியிடங்கள், இயற்பியலில் 122 பணியிடங்கள், கணினி அறிவியலில் 120 பணியிடங்கள், கணிதத்தில் 117 பணியிடங்கள் மற்றும் வேதியியலில் 103 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

உயிரியல் அறிவியல், வணிகம்(A&F), வணிகம்(B&I), வணிகம்(BA), தகவல் தொழில்நுட்பம், மனித உரிமம், இதழியல் மற்றும் தொலைத்தொடர்பியல் மற்றும் வனவாழ்வு உயிரியல் போன்ற பாடங்களில் தால 2 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளது.

அதே போல், ஆங்கிலம் (education),உணவு அறிவியல் & ஊட்டச்சத்து, புவியியல் (education), வரலாறு (education), மற்றும் இயற்பியல் அறிவியல் (education) பாடங்களில் தலா 1 இடங்கள் இடம்பெற்றுள்ளது.

மாவட்ட வாரியாக விவரங்களுக்கு : மாவட்ட பணியிடங்கள்

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு மாதம் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Also Read : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : மத்திய அரசு நிறுவனத்தில் 405 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் www.tngasa.in என்ற இணையத்தளத்தில் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.tngasa.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.12.2022.

First published:

Tags: College, Education, Jobs