ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளர் பணி.. விவரம் இதோ..

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளர் பணி.. விவரம் இதோ..

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

Central University of Tamil Nadu : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கெளரவ விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புவியியல் பாடத்தை முதன்மையான பாடமாகக் கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்துறை
கெளரவ விரிவுரையாளர்2புவியியல்

சம்பளம்:

ஒரு வகுப்பிற்கு ரூ.1,500 விதம் மாதம் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

புவியியல் பாடத்தை முதன்மையாகக் கொண்ட முதுகலைப் பட்டம் மற்றும் புவியியலில் டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் இணையத்தள அறிவிப்பில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: hodgeo@cutn.ac.in

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023.

நேர்காணல் நடைபெறும் நாள் : 11.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, University