நவம்பர் இறுதியில் குரூப் 4 தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 1 தேர்வை தவிர்த்து, 2017-ம் ஆண்டுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

news18
Updated: November 3, 2018, 5:48 PM IST
நவம்பர் இறுதியில் குரூப் 4 தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
செய்தியாளர்களிட பேசும் இரா.சுதன் (இடது)
news18
Updated: November 3, 2018, 5:48 PM IST
குரூப் 4 தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வு இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: வரும் 11-ம் தேதி குரூப் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளன. இத்தேர்வை எழுத 2,72,357 ஆண்கள், 3,54,136 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 6,26,503 பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 2,268 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.

குரூப் 1 தேர்வை தவிர்த்து, 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. அவற்றில் பெரும்பாலான முடிவுகள் திட்டமிட்ட தேதிக்குள் அறிவிக்கப்பட்டன. குரூப் 4 தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வு இந்த மாத இறுதிக்குள் நடைபெறும் என்றார் சுதன்.

நுழைவுச்சீட்டு வெளியீடு: இதனிடையே, குரூப் 2 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு  வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சரியான முறையில் விவரங்ளைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net / tnpscexams.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application.No) அல்லது பயனாளர் குறியீடு (Login id) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை  உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்1800 425 1002 என்ற கட்டணமில்லாததொலைபேசியிலோ அல்லது Contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Also watch

First published: November 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...