குரூப்-4 தேர்வில் முறைகேடு? 35 தேர்வர்களிடம் நாளை விசாரணை

குரூப்-4 தேர்வில் முறைகேடு? 35 தேர்வர்களிடம் நாளை விசாரணை
  • Share this:
குரூப்-4 தேர்வில் முதல் 100 தரவரிசையில் 35 இடங்களை பிடித்தவர்களிடம் நாளை விசாரணையும், ஆவணங்கள் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வில், முதல் 100 தரவரிசையில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தோ்வு எழுதியவா்களில் 35 போ் இடம்பெற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சாராதவர்கள் என்பதால், இந்த விவகாரம் கடும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. உறுதி அளித்திருந்தது. அதன்படி, தேர்ச்சி பெற்ற 35 பேரை விசாரணை நடத்துவதற்காக, சென்னையில் உள்ள பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நாளை காலை ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் எழுதியுள்ள டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம், விண்ணப்பத்தின்போது, சமர்பித்த ஆவணங்களையும் கொண்டுவருமாறு அறிவுறுத்தியுள்ளது.
First published: January 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading