நவம்பர் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

news18
Updated: August 10, 2018, 5:02 PM IST
நவம்பர் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கோப்புப் படம்
news18
Updated: August 10, 2018, 5:02 PM IST
வருகிற நவம்பர் மாதம் 11-ம் தேதி குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சப் ரிஜிஸ்டார், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக குரூப்-2 (நேர்முக பணி) தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.  இந்த குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதமே வெளியிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு தள்ளிப் போய் கொண்டே இருந்தது. தற்போது குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சுமார் 1,199 இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட இருக்கிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பமும் வெளியிடப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். 100 வினாக்கள் பொதுத் தமிழ் பாடத்திலிருந்தும் 100 வினாக்கள் பொது அறிவு பாடத்திலிருந்தும் கேட்கப்படும். 300 மதிப்பெண்ணுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வில் உரிய கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு முதன்மைத் தேர்வு நடைபெறும் . இதில் உரிய கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இந்தப் பட்டியலின் படி தேர்ச்சி பெற்றவர்கள் கவுன்சிலிங்க்கு அழைக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கவுன்சிலிங்க் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி உத்தேசமாக தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...