ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வேலை - நேரடியாக இன்டர்வியூவுக்கு செல்லலாம்!

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வேலை - நேரடியாக இன்டர்வியூவுக்கு செல்லலாம்!

காட்சி படம்

காட்சி படம்

இன்டர்வியூவில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் ஜிஆர்ஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஜிஆர்ஐ கல்வி நிறுவனத்தில் உள்ள 3 காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம், இன்டர்வியூவுக்கு செல்லும் முன்பாக வயது வரம்பு, கல்வித் தகுதி பணி அனுபவம் உள்பட அறிவிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ள நிபந்தனைகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இன்டர்வியூவில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் ஜிஆர்ஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து இன்டர்வியூ நாளில் சமர்ப்பிக்க வேண்டும். ஜிஆர்ஐ திண்டுக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள், இனி வரும் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள், பாடத்திட்டங்கள், விடைகள், மெரிட் பட்டியல், தேர்வுப்பட்டியல், நுழைவுச்சீட்டு, தேர்வு முடிவுகள், இனிவரும் அறிவிக்கைகள் என பல்வேறு தகவல்களை அந்த இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Also Read : ரயில்வேயில் வேலை - 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பணி விவரம் :

நிறுவனத்தின் பெயர் - காந்தி கிராம பல்கலைக்கழகம்

வேலை பெயர் - புராஜக்ட் அசிஸ்டெண்ட் மற்றும் புராஜக்ட் பெல்லோ

மொத்த காலியிடங்கள் - 3

பணியிடம் - திண்டுக்கல்

இன்டர்வியூ தேதி - 11.04.2022

அதிகாரப்பூர்வ இணையதளம் - https://www.ruraluniv.ac.in/

ஊதிய விவரம் :

புராஜக்ட் பெல்லோ - மாதந்தோறும் ரூ.14,000 / ரூ.16,000

புராஜக்ட் அசிஸ்டெண்ட் - ரூ.6,000

கல்வி தகுதி :

பணி ஆர்வலர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி / எம்எஸ்சி / எம்சிஏ படித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை பணிக்கான அறிவிக்கையில் பார்க்கலாம்.

பணி அறிவிக்கையை டவுன்லோடு செய்வது எப்படி

* காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு https://www.ruraluniv.ac.in/ செல்லவும்.

அதில் கெரியர் என்ற டேப் கிளிக் செய்து, தொடர்புடைய விளம்பரத்தை பார்க்கவும்.

* விளம்பரத்தின் மீது கிளிக் செய்யவும்.

* இப்போது அறிவிக்கை ஓப்பன் அகவும். அதை கவனமுடன் படித்து, அனைத்து தகுதிகளையும் சரிபார்த்துக் கொள்ளவும்.

* குறிப்பிட்ட நாளில் நீங்கள் நேரடியாக சென்று இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம்.

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள, கணிதத் துறையில் வருகின்ற 11ஆம் தேதி காலை 11 மணிக்கு இன்டர்வியூ நடைபெற உள்ளது.

Published by:Esakki Raja
First published:

Tags: Job Vacancy