முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலை... நாளையே கடைசி நாள் - உடனே அப்ளை பண்ணுங்க!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலை... நாளையே கடைசி நாள் - உடனே அப்ளை பண்ணுங்க!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சூப்பர் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சூப்பர் வேலை

TN Govt Jobs : இந்த வேலைக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கபடும்.

  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன்னதாக அறிவிப்பு வெளியான நிலையில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கபடும்.

வேலைக்கான விவரங்கள் :

 உசிலம்பட்டிவட்டார இயக்க மேலாளர்காலிப்பணியிட எண்ணிக்கை
 அலங்காநல்லூர்வட்டார ஒருங்கிணைப்பாளர்01
செல்லம்பட்டிவட்டார ஒருங்கிணைப்பாளர்01
அலங்காநல்லூர்வட்டார ஒருங்கிணைப்பாளர்02
கள்ளிக்குடிவட்டார ஒருங்கிணைப்பாளர்03
டி.கல்லுப்பட்டிவட்டார ஒருங்கிணைப்பாளர்03
மொத்தம்10

வட்டார இயக்க மேலாளர் - நியமனத்திற்கான தகுதிகள் :

1. இளநிலை பட்டப்படிப்புடன் கணினி படிப்பில் 6 மாத பட்டையபடிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். கணினி அறிவியல் பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. அதிக பட்ச வயது 28க்குள் இருக்க வேண்டும். சொந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

3. திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முன் அனுபவம்

வட்டார ஒருங்கிணைப்பாளர் - நியமனத்திற்கான தகுதிகள் :

1. பட்டப்படிப்பு மற்றும் கணினி படிப்பில் 6 மாத பட்டையபடிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

2. அதிக பட்ச வயது 28க்குள் இருக்க வேண்டும். சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

3. திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முன் அனுபவம்

நிபந்தனைகள் :

1. நிர்ணயிக்கப்பட்ட நாள், நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

2. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்து தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

3. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் அரசு இனச்சுழற்சி விதிமுறைகளின் படி பணியமர்த்தப்படுவர்.

மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை madurai.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் மற்றும் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 16.08.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்

அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெற

https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/08/2022080231.pdf

https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/08/2022080236.pdf

இந்த பக்கத்தில் காணவும்.

First published:

Tags: Job Vacancy