ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை...மாதம் 67,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க 3 நாட்களே உள்ளது

அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை...மாதம் 67,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க 3 நாட்களே உள்ளது

அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை

அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை

அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வகுப்பு படித்திருந்தால் போதும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் பல பிரிவுகளில் ஜூனியர் டெக்னிசியன் பதவிக்கான 83 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  பணியிடங்களுக்கான முழு விவரம்:

  1. ஜூனியர் டெக்னிசியன் ( printing/control):

  காலியிடங்கள் 68
  காலியிடங்களுக்கான பிரிவுபொது -35,ஒபிசி-14,எஸ்சி-10,எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-5.
  சம்பளம்ரூபாய்.18,780 முதல் 67,390 வரை.
  வயது18லிருந்து 25க்குள்.
  தகுதிLitho offset Machine Minder/Letter Press Machine Minder/Offset Printing/Platemaking/Electroplating ஆகிய பாடங்களில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி/எஸ்சிவிடி சான்றிதழ் அல்லது பிரின்டிங் டெக்னாலஜி பாடத்தில் டிப்ள்மோ.

  2. ஜூனியர் டெக்னிசியன்(Fitter):

  காலியிடங்கள்6
  காலியிடங்களுக்கான பிரிவுபொது-3,பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1,எஸ்டி-1.
  சம்பளம்ரூபாய் 18,780 - 67,390.
  தகுதிபிட்டர் பாடப்பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி/எஸ்சிவிடி சான்றிதழ்.
  வயது18லிருந்து 25க்குள்.

  3.ஜூனியர் டெக்னிசியன்(Turner):

  காலியிடங்கள்1
  காலியிடங்களுக்கான பிரிவுபொது பிரிவு
  சம்பளம்ரூபாய்.18780- 67,390
  வயது18 லிருந்து 25க்குள்
  தகுதிடர்ன்ர் பாடத்தில் ஐடிஐ மற்றும் என்சிவிடி/எஸ்சிவிடி சான்றிதழ்.

  4.ஜூனியர் டெக்னிசியன்(Welder):

  காலியிடங்கள்1
  காலியிடங்களுக்கான பிரிவுபொது
  சம்பளம்ரூபாய்.18780- 67,390
  வயது18 லிருந்து 25க்குள்
  தகுதிவெல்டர் பாடத்தில் ஐடிஐ மற்றும் என்சிவிடி/எஸ்சிவிடி சான்றிதழ்.

  5.ஜூனியர் டெக்னிசியன் (Electrical):

  காலியிடங்கள்3
  காலியிடங்களுக்கான பிரிவுபொது-2,பொருளாதார பிற்பட்டோர்-1
  சம்பளம்ரூபாய்.18,780- 67,390
  வயது18 லிருந்து 25க்குள்
  தகுதிஎலக்ட்ரிக்கல் பாடத்தில் ஐடிஐ மற்றும் என்சிவிடி/எஸ்சிவிடி சான்றிதழ்.

  6.ஜூனியர் டெக்னிசியன் (Electronics/Instrumentation):

  காலியிடங்கள்3
  காலியிடங்களுக்கான பிரிவுபொது-2,எஸ்சி-1
  சம்பளம்ரூபாய்.18,780- 67,390
  வயது18 லிருந்து 25க்குள்
  தகுதிஎலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமெண்டேசன் பாடத்தில் ஐடிஐ மற்றும் என்சிவிடி/எஸ்சிவிடி சான்றிதழ்.

  7. தீயணைப்பு வீரர் (Fireman):

  காலியிடங்கள்1
  காலியிடங்களுக்கான பிரிவுபொது
  சம்பளம்ரூபாய்.18,780- 67,390
  வயது18 லிருந்து 25க்குள் (வயது வரம்பில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குச் சலுகை அளிக்கப்படும்)
  தகுதி10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பயர்மேன் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கக் கட்டணம்:

  பொது/பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசி யினருக்கு ரூபாய்.600/

  எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய்.200.

  இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

  Also Read : மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு...இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்!

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியானவர்கள் http://spphyderabad.spimcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

  தேர்வு முறை:

  விண்ணப்பத் தேதி முடிவடைந்தவுடன் ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும். நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் உள்ளது.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.10.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Government jobs, Jobs