சமூக பாதுகாப்புத் துறையில் Chair Person வேலை ... பெண்கள் விண்ணப்பிக்கலாம் - நாளையே கடைசி தேதி

பெண்களுக்கான அரசு வேலை

ஒரு நபர் ஒரு மாவட்டத்தின் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்தால் அவர் குழந்தை நலக்குழு தலைவர் அல்ல உறுப்பினருக்கு நியமிக்க தகுதி அற்றவர் ஆவார்.

 • Share this:
  2015ம் ஆண்டின் இளைஞர் நீதி சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் (ம)உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கான கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.  இந்த வேலைக்கு offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 15.09.2021ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பத்தார்கள் 35 வயதுக்கு குறைவாகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவறாகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

  ஒரு நபர் ஒரு மாவட்டத்தின் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்தால் அவர் குழந்தை நலக்குழு தலைவர் அல்ல உறுப்பினருக்கு நியமிக்க தகுதி அற்றவர் ஆவார்.இதற்கான விண்ணப்ப படிவத்தை திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்குள் வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வேலைக்கான விவரங்கள்:   நிறுவனம் சமூக பாதுகாப்பு துறை, திண்டுக்கல்
  வேலையின் பெயர் Chair Person மற்றும் Members
  காலிப்பணி இடங்கள் 05
  வயது 35 வயது முதல் 65
  விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2021
  கல்வி தகுதி Child Psychology, Psychiatry, Law, Social Work, Sociology, Human Development போன்ற பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  முன் அனுபவம் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி District Child Protection Officer, District Child Protection Unit, Blessings, Plot No.4, 2nd cross street (Upstairs), SPR Nagar, Collectorate Post, Dindigul- 624004
  விண்ணப்ப முறை offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  விண்ணப்ப கட்டணம் No fees

   

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2021/08/2021083110.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
  Published by:Sankaravadivoo G
  First published: