ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... மத்திய அரசில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு!

10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... மத்திய அரசில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு!

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம்

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம்

Central Govt Job alert : மத்திய அரசின் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில்  கீழ் செயல்படும் கேத்ரி காப்பர் வாளகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 54 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்பயிற்சி பெற்றவர்கள், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.18 ஆயிரத்தில் தொடங்கி ரூ.45 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Mining Mate21ரூ.18,480–ரூ.45,400
Blaster22ரூ.18,180-ரூ.37,310
WED ‘ B’9ரூ.18,180–ரூ.37,310
WED ‘C’2ரூ.18,080-ரூ.35,960

வயது வரம்பு:

01.12.2022 தேதி படி அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக உள்ளது. மேலும் வயது தளர்வும் குறித்த விவரங்களுக்கு அறிவிப்பைக் காணவும்.

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Mining Mateடிப்ளமோ/டிகிரி உடன் 2 வருட அனுபவம்/10 ஆம் வகுப்பு தேர்ச்சி பிறகு தொழிற்பயிற்சி உடன் 3 வருட அனுபவம்/10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் 5 வருட அனுபவம்.
Blasterடிப்ளமோ உடன் 1 வருட அனுபவம்/டிகிரி உடன் 1 வருட அனுபவம்/தொழிற்பயிற்சி உடன் 3 வருட அனுபவம்/10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் 5 வருட அனுபவம்.
WED ‘ B’டிப்ளமோ உடன் 1 வருட அனுபவம்/டிகிரி உடன் 1 வருட அனுபவம்/தொழிற்பயிற்சி உடன் 3 வருட அனுபவம்/10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் 6 வருட அனுபவம்.
WED ‘C’டிப்ளமோ/டிகிரி உடன் 6 மாத அனுபவம்/12 ஆம் வகுப்பு தேர்ச்சி 3 வருட அனுபவம்/தொழிற்பயிற்சி உடன் 2 வருட அனுபவம்/10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் 4 வருட அனுபவம்.

மேலும் பணிக்கு ஏற்ற சான்றிதழ்களும் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, எழுதும் திறன் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கும் வாய்ப்பு : மாணவர்களுக்கு இலவச ட்ரோன் கருவி பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் https://www.hindustancopper.com/ மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.hindustancopper.com/Recruitment/CandidateLogin/97

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Employment news, Government jobs