ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.90,000 வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை - 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரூ.90,000 வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை - 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நெசவாளர் சேவை மையம்

நெசவாளர் சேவை மையம்

Central Govt Job alert : நெசவாளர் சேவை மையங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் கீழ் செயல்படும் நெசவாளர் சேவை மையம், சென்னை தென் இந்தியாவில் உள்ள நெசவாளர் சேவை மையங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 30 வயதிற்குரிய ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்பணியிடம்வயது
Senior Printer130
Junior Weaver130
Junior Printer130
Junior Assistant (Weaving)230
Attendant (Weaving)130

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Senior Printer10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பிரிண்டிங் டிப்ளமோ. 8 வருட அனுபவம்.
Junior Weaver10 ஆம் வகுப்பு தேர்ச்சி, நெசவு செய்தலில் 8 வருட அனுபவம்
Junior Printer10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பிரிண்டிங் டிப்ளமோ. 5 வருட அனுபவம்.
Junior Assistant (Weaving)10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Textile Weaving Trade டிப்ளமோ.
Attendant (Weaving)10 ஆம் வகுப்பு தேர்ச்சி,Textile Weaving/Winding/Warping Trade டிப்ளமோ. 2 வருட அனுபவம்

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் http://handlooms.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து விரைவு தபால் மூலம் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : http://handlooms.gov.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Director (South Zone), Weavers’ Service Centre, C.1.B, Rajaji Bhawan, Besant Nagar

Chennai-600090.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.01.2023.

First published:

Tags: Government jobs, Handloom workers, Job vacancies