முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.. சிவகங்கையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.. சிவகங்கையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

சிவகங்கையில் அரசு வேலை

சிவகங்கையில் அரசு வேலை

TN Job alert : சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையம் உள்ள நல வாழ்வு மையங்களில் மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதாரப்பணியாளர், மருத்துவமனைப் பணியாளர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (13.02.2023) கடைசி நாளாக உள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
மருத்துவ அலுவலர்440ரூ.60,000/-
பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை - II1235ரூ.14,000/-
மருத்துவமனைப் பணியாளர்445ரூ.8,500/

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
மருத்துவ அலுவலர்MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பல்நோக்கு சுகாதார பணியாளர்12 ஆம் வகுப்பு தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்). பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவமனைப் பணியாளர்குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://sivaganga.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

Also Read : கோவை அரசு மருத்துவமனைகளில் 98 காலிப் பணியிடங்கள்.. அதிகபட்சம் ரூ.60,000 ஊதியம்...!

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,

சிவகங்கை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.02.2023 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Hospital, Sivagangai, Tamil Nadu Government Jobs