முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..மதுரை மாவட்ட நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..மதுரை மாவட்ட நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு

மதுரையில் வேலை

மதுரையில் வேலை

TN job alert : மதுரை மாவட்ட நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம், நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அறிவிப்பில் மருத்துவ அலுவலர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் ஆகிய பதவிகள் இடம்பெற்றுள்ளன.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயது
மருத்துவ அலுவலர்கள்4640
பல்நோக்கு சுகாதார பணியாளர்4650
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்4640

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
மருத்துவ அலுவலர்கள்இளங்கலை மருத்துவப் படிப்பு
பல்நோக்கு சுகாதார பணியாளர்2 வருடச் சான்றிதழ் படிப்பு (பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் துப்பரவு ஆய்வாளர்)
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்8 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://madurai.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

Also Read : Jobs in Chennai: சென்னையில் அதிகம் வேலைவாய்ப்புகள் தரும் துறைகள் என்னென்ன தெரியுமா?

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் / முதல்வர்,

மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம், விசுவநாதபுரம்,

மதுரை மாவட்டம் - 625 014.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 16.02.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Madurai, Tamil Nadu Government Jobs