முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தூத்துக்குடி தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வேலை... விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளன

தூத்துக்குடி தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வேலை... விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளன

தூத்துக்குடியில் அரசு வேலை

தூத்துக்குடியில் அரசு வேலை

TN Job alert : தூத்துக்குடி தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் சுகாதார மற்றும் நல வாழ்வு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடி தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் புதிதாகத் தோற்றுவிக்கப்படவிருக்கும் சுகாதார மற்றும் நல வாழ்வு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மருத்துவர், பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. இப்பணியிடங்கள் மாத தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயது
மருத்துவர்1040
பல்நோக்கு சுகாதார பணியாளர்1040
மருத்துவமனை பணியாளர்1040

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
மருத்துவர்MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பல்நோக்கு சுகாதார பணியாளர்12 ஆம் வகுப்பு தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்). பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் / துப்பரவு ஆய்வாளர் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவமனை பணியாளர்குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

Also Read : ரூ.50000 வரை சம்பளம்.. சான்றிதழ் படிப்பு போதும்.. தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு..!

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.02.2023 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Thoothukodi