தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பணியின் விவரங்கள் மற்றும் தகுதிகள் குறித்துப் பார்ப்போம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | வயது |
Finance Officer | 1 | ரூ.85,000 | 40 |
Technical Officer | 1 | ரூ.85,000 | 45 |
Admin Officer | 1 | ரூ.35,000 | - |
Admin Associates | 4 | ரூ.30,000 | - |
Post of an Advisor | 1 | - | - |
கல்வி மற்றும் இதர தகுதிகள்:
பதவியின் பெயர் | கல்வி |
Finance Officer | Finance / Chartered Accountant /ICWA பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட அனுபவம் தேவை |
Technical Officer | Environmental Sciences பாடத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் |
Admin Officer | ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் 5 வருட அனுபவம் |
Admin Associates | ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் 5 வருட அனுபவம் |
Post of an Advisor | Environmental Sciences அல்லது அதற்கு நிகரான பாடத்தில் Ph.D மற்றும் 15 வருட அனுபவம் |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tngreencompany.com/ என்ற இணையத்தளத்தில் உள்ள ஆன்லைன் படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://tngreencompany.com/careers
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.02.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.