Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.65 ஆயிரம் வரை சம்பளம்..தமிழ் தெரிந்தால் போதும் - தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் பணி...!

ரூ.65 ஆயிரம் வரை சம்பளம்..தமிழ் தெரிந்தால் போதும் - தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் பணி...!

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்

State human rights commission Tamil Nadu Recruitment : தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் 2 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை - III, ஒரு தட்டச்சர், 6 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 2 இரவுக் காவலர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியின் அடிப்படையில் இப்பணிகளுக்குத் தகுந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் 8, 10, 12 வகுப்பு படித்தவர்களை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்சம்பளம்வயது
சுருக்கெழுத்து தட்டச்சர்-நிலை III2ரூ.20,500-65,500அதிகபட்சம் 37
தட்டச்சர்1ரூ.19,500-62,000அதிகபட்சம் 37
அலுவலக உதவியாளர்6ரூ.15,700-50,000அதிகபட்சம் 37
இரவு காவலர்1ரூ.15,700-50,000அதிகபட்சம் 37

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
சுருக்கெழுத்து தட்டச்சர்-நிலை III10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு அல்லது பட்டப்படிப்பு
தட்டச்சர்10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு அல்லது பட்டப்படிப்பு
அலுவலக உதவியாளர்8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
இரவுக் காவலர்தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு / நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.

Also Read : சென்னை பல்கலைக்கழகத்தில் Project technician பணி - விவரங்கள் இதோ..!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://shrc.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், சாதிச் சான்றிதழ், அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடமிருந்து பெறப்பட்ட மனுதாரரின் புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தை சான்றிதழ், புகைப்படமும் ஒப்புகை செய்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபால் மூலம் மட்டும் அனுப்பப்பட வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர்,

மாநில மனித உரிமைகள் ஆணையம்,

தமிழ்நாடு, எண்.143. பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,(கிரின்வேஸ் சாலை),

சென்னை - 600 028.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Employment news, Jobs, Tamil Nadu Government Jobs