ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.69,000 வரை சம்பளம்.. மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

ரூ.69,000 வரை சம்பளம்.. மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசு வேலை

மத்திய அரசு வேலை

Central govt job alert : மத்திய அரசின் ஃபதேகர் கன்டோன்மென்ட் போர்டில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபதேகர் கன்டோன்மென்ட் போர்டில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்/திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 21 வயது நிறைந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
R.M.O(Doctor)1ரூ.15,600-69,10023-35
Mid-Wife(Trained)1ரூ.5,200-20,20021-30
Electrician1ரூ.5,200-20,20021-30
Motor Pump Attendant1ரூ.5,200-20,20021-30

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
R.M.O(Doctor)எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு மற்றும் 1 வருடப் பயிற்சி
Mid-Wife(Trained)ANM 2 வருட டிப்ளமோ
Electrician10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ
Motor Pump Attendant10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்/திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சென்னையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் கலந்துகொள்ளலாம்..

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://fatehgarh.cantt.gov.in/ என்ற இணையத்தளத்தில் 21.01.2023 முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.400 மற்றும் இதர பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://fcb.onlineregistrationforms.com

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.02.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Employment news, Government jobs, Job vacancies