கரூர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தில் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் தகுதிக்கேற்றவாறு நிரப்பப்படவுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
Medical Officer | 4 | 40 | ரூ.60,000 |
Health Inspector Grade-II | 4 | 35 | ரூ.14,000 |
Hospital Worker | 4 | 45 | ரூ.8,500 |
Dental Assistant | 2 | 35 | ரூ.10,395 |
Audio Metric Assistant | 1 | 35 | ரூ.15,000 |
Radiographer(T]EI) | 2 | 35 | ரூ.10,000 |
OT Assistant(TAEI) | 1 | 35 | ரூ.8,400 |
Instructor for Young Hearing Impaired | 1 | 35 | ரூ.15,000 |
Hospital Worker | 1 | 35 | ரூ.8,500 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Medical Officer | MBBS தேர்ச்சி |
Health Inspector Grade-II | தமிழ் மொழி கொண்ட 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, உயிரியல் அல்லது தாவரவியல்/விலங்கியல் பாடங்கள் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட Multi Purpose Health Workers Course / Sanitary Inspector Course. |
Hospital Worker | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் |
Dental Assistant | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Dental Unit 1 வருட அனுபவம் |
Audio Metric Assistant | Audiometrican/DHLS பிரிவில் டிப்ளமோ |
Radiographer(T]EI) | Diagnostics Technology பாடத்தில் டிப்ளமோ /Radiography இளங்கலைப் பட்டம் |
OT Assistant(TAEI) | OT Technician பிரிவில் 3 அல்லது 1 வருடப் படிப்பு |
Instructor for Young Hearing Impaired | DTYDHH டிப்ளமோ |
Hospital Worker | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Also Read : MRB : ரூ.52,400 வரை சம்பளம்... மருத்துவ சார்நிலைப் பணிகளில் 335 காலிப்பணியிடங்கள்!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Executive Secretary / Deputy Director of Health Services,
District Health Society,
O/o, Deputy Director of Health Services
Karur District – 639 007.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.02.2023 மாலை 5 மணி வரை
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri, Jobs, Tamil Nadu Government Jobs