தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவு" தொடக்க நிகழ்ச்சி இன்று (07.03.2023) சென்னை, கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.
இத்திட்டத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த போட்டித்தேர்வுகள் பிரிவின் கீழ் அரசுத் தேர்வுகளான எஸ்.எஸ்.சி (SSC), ரயில்வே (RAILWAY), வங்கி (BANKING) மத்திய (UPSC), தமிழ்நாடு அரசுப்பணி (TNPSC), இராணுவம் (DEFENCE) போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இப்போட்டித்தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் இப்போட்டித் தேர்வு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
அரசுப்பணி ஒன்றையே கனவாகக் கொண்டுள்ள ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் கனவை மெய்ப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். மத்திய அரசுப் பணி போட்டித்தேர்வுகளில் தமிழர்களின் பங்கேற்பை கணிசமான அளவில் அதிகரித்து வெற்றி பெறச் செய்வதோடு மட்டுமல்லாமல் கூடிய விரைவில் ஐஐடி (IIT), என்.ஐ.டி(NIT), தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் (NATIONAL LAW UNIVERSITY), அகில இந்திய மருத்துவ நிறுவனம் (ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES), ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயிலும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC