முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNSTC -ல் 807 ஓட்டுநர் பணியிடங்கள்... விண்ணப்பம் செய்வது எப்படி?

TNSTC -ல் 807 ஓட்டுநர் பணியிடங்கள்... விண்ணப்பம் செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

TNSTC recruitment 2023 : அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான முழு விவரம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசு கடந்த 14ம் தேதி,  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver - cum - conductor) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிட அரசாணை வெளியிட்டது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், செய்தித் தாள்களில் விளம்பரம் மூலமாகவும் பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து தகுதிவாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியலை,   ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பெறுவார் என்றும்,  ஓட்டுநர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மேலாண் இயக்குநர் பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 122 ஓட்டுநர் பணியிடங்கள்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில், இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி கடைசி தேதி என்றும், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், போக்குவரத்துக் கழகங்கள் இதுநாள் வரையில் செய்தித் தாளில் விளம்பரம் செய்து ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கவில்லை என்று  கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கS.E.T.C அரசு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர் பணியிடங்கள்: சூப்பர் அறிவிப்பு வெளியானது

தேர்வர்கள், அவ்வப்போதைய நிலவரங்களை  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் இணையதளத்திலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களை அறிந்து கொள்ள, உங்கள் அருகில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs