ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC புதிய வேலைவாய்ப்பு : ரூ.2 லட்சத்திற்கு மேல் சம்பளத்தில் சுற்றுலா அலுவலர் பணி.!

TNPSC புதிய வேலைவாய்ப்பு : ரூ.2 லட்சத்திற்கு மேல் சம்பளத்தில் சுற்றுலா அலுவலர் பணி.!

சுற்றுலா அலுவலர் பணி

சுற்றுலா அலுவலர் பணி

TNPSC Tourist Officer Recruitment : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேரடி நியமனத்திற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய சுற்றுலா அலுவலர் பதவிக்கான நேரடி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்பணியிடங்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
சுற்றுலா அலுவலர்3ரூ.56,100-2,05,700

வயது வரம்பு:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC/DC,

BC(OBCM), BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இதர பிரிவினருக்கு 32 அதிகபட்ச வயதாகவுள்ளது.

கல்வித்தகுதி:

Travel and Tourism பாடத்தில் முதுகலைப் பட்டம்/Tourism பாடத்தை ஒரு பாடமாகக் கொண்ட ஏதேனும் முதுகலைப் பட்டம்/முதுகலைப் பட்டம் மற்றும் M.Phil(Tourism)/முதுகலைப் பட்டம் மற்றும் Tourism டிப்ளமோ

மற்றும்

Computer on Office Automation சான்றிதழ் பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு சென்னையில் மட்டும் நடக்கும்.

Also Read : கடலோர காவல்படையில் மாலுமியாக வேண்டுமா? - 255 பணியிடங்கள்... 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள்தேதி
விண்ணப்பிக்கக் கடைசி நாள்23.02.2023
விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம்28.02.2023 - 02.03.2023
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள்10.06.2023 - 11.06.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Government jobs, Jobs, Tamil Nadu Government Jobs, TNPSC