முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / குரூப்-2 தேர்வில் குளறுபடி நடந்த விவகாரம் : அரசு அதிகாரிகளிடம் அறிக்கை கேட்க டி.என்.பி.எஸ்.சி. திட்டம்!

குரூப்-2 தேர்வில் குளறுபடி நடந்த விவகாரம் : அரசு அதிகாரிகளிடம் அறிக்கை கேட்க டி.என்.பி.எஸ்.சி. திட்டம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

வினாத்தாள் எங்கும் வெளியாகவில்லை என்றும், சில தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக மறுத்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குரூப் 2, 2ஏ தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், மறுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்றே டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வினாத்தாள் வழங்கப்பட்டு, வரிசை எண் மாறி இருந்ததால், மீண்டும் பெறப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் கூறியதை ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வினாத்தாள் எங்கும் வெளியாகவில்லை என்றும், சில தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதையும் வாசிக்கஅரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச கோச்சிங்: தாட்கோ அறிவிப்பு

இந்த குழப்பங்கள் தகுதித் தாளான முற்பகல் தேர்வில் மட்டுமே நடந்தததாலும், அது தரவரிசைக்கு கணக்கில் கொள்ளப்படாததால் சிக்கல் இல்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி கருதுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

First published:

Tags: TNPSC