குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான அட்டவணையை (Result Declaration Schedule) வெளியிட்டுள்ளது.
Group 4 Examination Results: குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வு மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7,301 குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வு கடந்த 24.07.2022 அன்று நடைபெற்றது. 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 18.36 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இதையும் வாசிக்க: ”வதந்திகளை நம்ப வேண்டாம்... “ - குரூப் 4 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிஎன்பிஎஸ்சி!
Group 1 Prelims Examination: துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 90,957 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஆர்வம் குறைகிறதா.... தரவுகள் சொல்வது என்ன?
Combined Statistical Subordinate Services Examination: 2023, ஜனவரி 29ம் தேதியன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Group-VII-B Services: 77 காலியிடங்கள் கொண்ட குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை - III பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதற்கான, எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
Forest Apprentice in Tamil Nadu Forest Subordinate Service (Group-VI Services): தமிழ்நாடு வனசார் பணியில் அடங்கிய 10 வனத்தொழில் பழகுநர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் வெளியிட்டது.
Posts of English Reporter and Tamil Reporter: தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள ஆங்கில மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, எழுத்துத் தேர்வு 21.12.2022 அன்று சென்னை தேர்வு மையத்தில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் நடைபெற்றது.
Posts of JAILOR (Men) and JAILOR (Special Prison for Women): தமிழ்நாடு சிறைப் பணிகளில் உள்ள சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, எழுத்துத் தேர்வு 26.12.2022 அன்று நடைபெற்றது.
Post of Sub-Inspector & Inspector of Fisheries Department: தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள மீன்துறை ஆய்வாளர் மற்றும் மீன்துறை சார் ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Executive Officer, Grade-III & Grade-IV included in Group-VIII Services: தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் பதவி எழுத்துத் தேர்விற்கான முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கான தேர்வு 20.05.2022 அன்று நடைபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC