ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC வேலைவாய்ப்பு: ரூ.1.30 லட்சம் சம்பளம்...மறுவாழ்வு அலுவலர் பணி...விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

TNPSC வேலைவாய்ப்பு: ரூ.1.30 லட்சம் சம்பளம்...மறுவாழ்வு அலுவலர் பணி...விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

TNPSC Recruitment: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது.  இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக உள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடங்கள்சம்பளம்
இளநிலை மறுவாழ்வு அலுவலர்( Junior Rehabilitation Officer)7ரூ.35,600-1,30,800/-

வயது வரம்பு:

SC, SC(A), ST, MBC/DC, BC, BCM and Destitute widows பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. இதர பிரிவினருக்கு அதிகபட்சம் வயது 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

உளவியல்/சமூகப்பணி/சமூகவியல் போன்ற பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 2 வருட அனுபவம் தேவை.

இட ஒதுக்கீடு:

பொது.பி(பொது) - 1, பொது.பி(பெ) - 1, பி.வ(பொ) - 1, மி.பி.வ.சீ.ம(பொது) - 1, ஆ.தி(அ)(பெ)(த.வ.க) - 1, ஆ.தி(பொ) - 1.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு விவரங்கள்:

ஆன்லைன் மூலமாக நடைபெறும் எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் எழுத வேண்டும். இரண்டாம் தாளில் தமிழ் வழி கட்டாய தேர்வு இடம்பெறும்.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில்  தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

Also Read : பொது ரிசர்வ் என்ஜினீயர் படையில் 1,099 காலிப்பணியிடங்கள்..10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை:

டிஎன்பிஎஸ்சி பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கப் பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100 ஆனலைனில் செலுத்த வேண்டும். SC, SC(A), ST, DW மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வுக் கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://apply.tnpscexams.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 07.01.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC