முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: மார்ச் மாதம் ரிசல்ட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: மார்ச் மாதம் ரிசல்ட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு

டிஎன்பிஎஸ்சி தேர்வு

Group - IV Exam Result: கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில், 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

TNPSC Group 4 Examination Latest News Updates: நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமற்ற தகவலைகளை நம்ப வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர்.

இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால் ( integrated - two part OMR answer sheets), விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்யப்படுகிறது.

அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங் காணப்பட்டு, அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம்  தேவைப்படுகிறது.  விடைத்தாட்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது.

கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில், 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர். இம்முறை விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே எஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்புப் பணிகள்  மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 36 லட்சத்திறகும் கூடுதலாக உள்ளது. கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது, ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.

”வதந்திகளை நம்ப வேண்டாம்... “ - குரூப் 4 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிஎன்பிஎஸ்சி!

மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம், பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத்தோவுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருவதாலும், தோவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எவ்வித தவறுக்கும் இடம் தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆகையால், தேர்வர்கள் இத்தோவு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

First published:

Tags: TNPSC