முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

TNPSC Group 4 Result declared: விண்ணப்பதாரர்கள் தங்களது பதவி எண்- ஐ சமர்ப்பித்து, தங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் குரூப்- 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. மொத்தம், 7301 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான, எழுத்துத் தேர்வு  2022ம்ஆண்டு  ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், கடந்த 21ம் தேதி, குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டன.

குரூப் 4 தேர்வர்கள் முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகளைக் காண : https://www.tnpsc.gov.in/English/latest_results.aspx  

விண்ணப்பதாரர்கள் தங்களது பதவி எண்- ஐ சமர்ப்பித்து, தங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர், தேர்வு அட்டவணை உரிய நேரத்தில் டிஎன்பிஎஸ்சி     ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். எனவே, தேர்வர்கள் தங்களது வயது/வயது தளர்வு/பிறந்த தேதி, கல்வித் தகுதிகள், இடஒதுக்கீடு, உடல் குறைபாடு (பொருந்தினால்), தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ் (பொருந்தினால்) போன்றவை தொடர்பான அசல் சான்றிதழ்களை  தற்போது விண்ணப்பதாரர்கள் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

First published:

Tags: Group 4, Group Exams, Tamil Nadu Government Jobs, TNPSC