முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC Group 4 Result: குரூப் 4 தேர்வு முடிவுகள் - கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத தாமதம்!

TNPSC Group 4 Result: குரூப் 4 தேர்வு முடிவுகள் - கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத தாமதம்!

டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி

TNPSC Group 4 Exam Result updates: தேர்வு முறைகளில்  நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்வாணையம் பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நடத்தி முடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு தேர்வர்களிடம் பரவலாக அதிகரித்து காணப்படுகிறது.

2013ல் 5,566 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவு அறிவிக்கப்பட கிட்டத்தட்ட 6 மாதங்கள் எடுக்கப்பட்ட நிலையில்,  2016, 2019 ஆகிய ஆண்டுகளில் தோராயமாக மூன்று மாத கால இடைவெளியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  ஆனால் தற்போது எழுத்துத் தேர்வு முடிவுகள் நடத்தி முடிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வமாக  தகவல்களை வெளியிடவில்லை.

அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான  இட ஒதுக்கீடு முறையில் சில மாற்றங்கள் செயல்படுத்துவதன் காரணமாக இந்த கால தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், முன்னதாக அறிவிக்கப்பட்ட குரூப் காலியிடங்களை டிஎன்பிஎஸ்சி அதிகரிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Group 4 : முந்தைய ஆண்டு தேர்வு தேதி, தேர்வு முடிவு குறித்த விவரங்கள்:

ஆட்சேர்ப்பு ஆண்டுகுரூப் 4 காலியிடங்கள்தேர்வு தேதிதேர்வு முடிவுகால இடைவெளி
2013556625/08/201304/03/20146 மாதங்களுக்கு மேல்
2014496321/12/201422/05/2015தோராயமாக 5 மாதங்கள்
2015813 (கிராம நிர்வாக அலுவலர்)28/02/2016 01.07.2016தோராயமாக 5 மாதங்கள்
2016545106.11.201622.02.2017தோராயமாக 3 மாதங்கள்
2017935111/02/201830/07/2018தோராயமாக 5 மாதங்கள்
2018 ----
2019649101/09/201911/12/2019தோராயமாக 3 மாதங்கள்
2020 ----
2021----
20227,30124.07.2022 ?

தேர்வு முறைகளில்  நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்வாணையம் பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும், தேர்வர்கள் எதிர்வரும் வாழ்க்கை பயணங்களுக்கு தாங்களாக தயார் செய்து கொள்ள, நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் வாசிக்க: TNPSC குரூப் 4 தேர்வர்களே... களநிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

குரூப் 4 தேர்வு தொடர்பான நடவடிக்கைகள்:

குரூப் 4 பதவிகள் ஒற்றை நிலை தேர்வு முறை கொண்டது. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுகின்றனர். எவ்வாறாயினும், தேர்வு தொடர்பான நடவடிக்கைகள் முழுமையடைய குறைந்தது ஓராண்டு காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எழுத்துத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு  முதற்கட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். பின்னர்,  இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்  பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிடும். இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்தவுடன் கலந்தாய்வுக்கான பட்டியலை வெளியிடும்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவரவர் விருப்பத்திற்கிணங்க நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்ப உதவியுடன் பணி மற்றும் அலகு ஒதுக்கீடு அப்பொழுதே செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளின் கலந்தாய்வின் இறுதியிலும், எஞ்சியுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.

First published:

Tags: TNPSC