முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC குரூப் 4 தேர்வர்களே : ரிசல்ட்-க்கு முன் இதையெல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்!

TNPSC குரூப் 4 தேர்வர்களே : ரிசல்ட்-க்கு முன் இதையெல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

டிஎன்பி எஸ்சி ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள முக்கிய அறிவுறுத்தல்களின்படி, சான்றிதழ்களின் தேவையை முன்கூட்டியே சரிபார்த்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

குரூப் 4 தேர்வர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்பட உள்ளன. எனவே, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?  குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு எப்படி நடைபெறும் முதலானவற்றை இங்கு பார்க்கலாம்.

குரூப் 4 தேர்வு முறை: முதற்கட்டமாக, குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் Interactive mode-ல் வெளியிடும். இதில், விண்ணப்பதாரர்கள் தங்களது பதவி எண்- ஐ சமர்ப்பித்து, தங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சில தினங்களுக்குப் பிறகு, எழுத்துத் தேர்வின் அடிப்படையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர் (Typist) , சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர்கள்/ சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை உள்ளிட்ட விவரங்களை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் (Interactive Mode)

2018-2019 மற்றும் 2019-202 ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 4,499வது இடத்திற்குள் வந்த தேர்வர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 4,130வது வரை இடத்திற்குள் வந்த மிக பிற்படுத்தப்பட்ட தேர்வர்களும், 6,366வது வரை இடத்திற்குள் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேர்வர்களும், 15,320 வரைக்குள் வந்த பழங்குடியின தேர்வர்களும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் வாசிக்க:  மத்திய அரசில் 5,369 காலிப்பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  சான்றிதழ் சரிபார்ப்பின்போது வயது/வயது தளர்வு/பிறந்த தேதி, கல்வித் தகுதிகள், சமூக இடஒதுக்கீடு, உடல் குறைபாடு (பொருந்தினால்) போன்றவை தொடர்பான அசல் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு:

இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், அசல்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர். இதுதொடர்பான, விவரங்களை Interatcive Mode-ல் மூலம் தெரிவிக்கப்படும்.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர்  அசல்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.  இந்த பணிகள் முழுவதுமாக முடிவடைந்த பின்னரே, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிடும்.

எழுத்துத் தேர்வு முடிவுகள் --> இணையவழி சான்றிதழ் சரிப்பரப்பு ---> அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ----> கலந்தாய்வு ----> பணி ஆணை

கலந்தாய்வு: ஒட்டுமொத்த தரவரிசையின் படி, கலந்தாய்வில் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர். கலந்தாய்வு நடைபெறும்போது, பதவிகளின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை / அலகு (யூனிட்) தொடர்பான விவரங்கள் Video Projector மூலம் காண்பிக்கப்படும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்து நொடிக்கும் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரரின் விருப்பத் தேர்வு அடிப்படையில், பதவி / அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை தனிப்பட்ட பார் குறியீடு (Bar code) அடையாளத்துடன் அப்பொழுதே வழங்கப்படும். அனைத்து செயல்முறைகளும் CCTVன் மூலம் கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு நாள் கலந்தாய்வு முடிந்த பிறகும், துறை வாரியாக மாவட்ட வாரியாக, இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

எனவே, தேர்வர்கள் இப்போதே டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள முக்கிய அறிவுறுத்தல்களின்படி, சான்றிதழ்களின் தேவையை முன்கூட்டியே சரிபார்த்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

First published:

Tags: TNPSC