ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC வேலைவாய்ப்பு : ரூ. 2 லட்சம் சம்பளத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் பணி - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

TNPSC வேலைவாய்ப்பு : ரூ. 2 லட்சம் சம்பளத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் பணி - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

tnpsc District Education officer notification: விண்ணப்பத்தாரகள் தங்கள் இடைநிலைக் கல்வி/ PSU/HSC இவைகளில் ஏதேனும் ஒன்றில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காலியாக உள்ள 11 மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer (Group – I C Services) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.  இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே (13.01.2023) கடைசி நாள்.

TNPSC DIstrict Educational Officer காலியிடங்கள்: 11

இதில்  பொதுவகை பிரிவினருக்கு 9 இடங்களும், அரசு உதவி பெறும்  உயர்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பிரிவில் (Teacher Categoryy) இருந்து 2 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு:  இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர்  1.07.2022 அன்று 32 வயதுக்குள் கீழ் வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) , ஆதி திராவிடர், ஆதி திராவிட அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

ஆசிரியர் வகை (Teacher Category) விண்ணப்பதாரர்கள் 1.07.2022 அன்று 42 வயதுக்குள் கீழ் வேண்டும்.

TNPSC District Educational Officer கல்வித் தகுதி: Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce, Tamil and English ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(மற்றும்)

B.T / B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும்

(மற்றும்)

விண்ணப்பத்தாரகள் தங்கள் இடைநிலைக் கல்வி/ PSU/HSC இவைகளில் ஏதேனும் ஒன்றில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC District Educational Officer சம்பளம் விவரம் : ரூ. 56900- 2,09,200/- வரை (நிலை 22)

Also Read : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு... 93 காலி பணியிடங்கள் அறிவிப்பு

தேர்வு திட்டம்:  இப்பதவிக்கு முதல் நிலை தேர்வு ஏப்ரல் 9 ந் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வில் தமிழ் மொழி பிரிவில் 40 மதிப்பெண்கள் தகுதி பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் TNPSCதேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC