முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ. 2 லட்சம் வரை மாதச் சம்பளம்... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புது வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!

ரூ. 2 லட்சம் வரை மாதச் சம்பளம்... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புது வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம்

பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கல்லூரி நூலகர், மாவட்ட நூலக அலுவலர் மற்றும் இதர பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  வெளியிட்டது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை 1.03.2023 அன்றுடன் நிறைவடைய இருக்கிறது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்: 

பதவிகாலியிடங்கள்சம்பளம்
கல்லூரி நூலகர் (அரசு சட்டக் கல்லூரி )8ரூ. 57,700-2,11,500
நூலகர் மற்றும் தகவல் அலுவலர்1ரூ.56,100- 2,05,700
மாவட்ட நூலக அலுவலர்3ரூ.56,100- 2,05,700

கல்வித் தகுதி: குறைந்தது நூலக அறிவியில் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு / கணினி வழித் தேர்வு, மற்றும் வாய்மொழித் தேர்வு என்ற இரண்டு நிலைகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள்  அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை tnpsc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 01-03-2023 ஆகும். காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை டிஎன்பிஎஸ்சி  அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

First published:

Tags: Tamil Nadu Government Jobs