முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC : ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்.. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

TNPSC : ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்.. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

TNPSC COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES : டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய பதவிகளில் காலியாக உள்ள 1083 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை, நகர் ஊரமைப்பு துறை மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை ஆகிய துறைகளில் பொறியியல் சார்நிலைப் பணிகளில் உள்ள 1083 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் அடிப்படையில் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் 04.03.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
பணிமேற்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை794ரூ.35,400 - 1,30,400/-
இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறை236ரூ.35,400 - 1,30,400/-
இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப் பணித் துறை18ரூ.35,400 - 1,30,400/-
வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்பு துறை10ரூ.35,400 - 1,30,400/-
முதலாள்.நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை25ரூ.19,500 - 71,900/-

வயது வரம்பு :

பதவியின் பெயர்SC,SC(A),ST,MBC/DC,BC,BCM/Destitute Widowsஇதர பிரிவினர்
பணிமேற்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை37வயது வரம்பு இல்லை
இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறை32SC,SC(A),ST பிரிவினருக்கு - 35MBC/DC,BC,BCM/Destitute Widows பிரிவினருக்கு - 34
இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப் பணித் துறை3237
வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்பு துறை3237
முதலாள்.நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை32வயது வரம்பு இல்லை

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்
பணிமேற்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைCivil Engineering பாடத்தில் டிப்ளமோ மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறைCivil Engineering பாடத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி. தொழிற்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப் பணித் துறைCivil Engineering பாடத்தில் டிப்ளமோ/ Architectural Assistantship பாடத்தில் டிப்ளமோ
வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்பு துறைPost Diploma in Town and Country Planning / Civil Engineering டிப்ளமொ அல்லது Architectural Assistantship டிப்ளமோ அல்லது பணிக்கு ஏற்ற கல்வி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்குக் குறையாமல் அனுபவம் தேவை.
முதலாள்.நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறைMechanical Engineering டிப்ளமோ/டிகிரி

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் கட்டாய தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சியின் இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள்நாட்கள்
விண்ணப்பிக்கக் கடைசி நாள்04.03.2023
இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் செய்வதற்கான காலம்09.03.2023 - 11.03.2023
எழுத்துத் தேர்வு தேதி27.05.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs, TNPSC