தமிழ்நாட்டில், பெருவாரியான அரசு பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்புகிறது. அதேபோன்று, அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியமும், மருத்துவத் துறை சார்ந்த பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையமும் தேர்வு செய்து வருகின்றன.
பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சிப் போக்கு, அரசாங்க மனிதவள கொள்கைகள் மற்றும் நிதிச் சுமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இந்தாண்டு ஆசிரிய பட்டதாரிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கு முன்வந்திருப்பதாக தெரிகிறது.
உதாரணமாக, தமிழ்நாடு ஆசிரயர் தேர்வு வாரியம் 2023ம் ஆண்டுக்கான தனது தேர்வு திட்ட அட்டவணையில் 15,000 ஆசிரியர் இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. இதில், குறிப்பாக பட்டதாரிகள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த உதவி பேராசிரியர்கள் ( 4000 காலியிடங்கள்) பணியிடங்களுக்கான அறிவிப்பும் இடம் பெற்றது. அதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்களுக்கு இதுநாள் வரை வேலை வழங்கப்படாத நிலையில், இந்தாண்டு 6553 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், 3,587 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் நிர்ப்பப்படும் என்றும் தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 2023 ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II குறித்த அறிவிப்பும் இந்தாண்டு வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
அதேசமயம், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்ட 2023 ஆண்டுத் திட்டத்தில் பெரும்பாலான தேர்வுகள் துறை சார்ந்த தேர்வுகளாக அறிவிக்கப். மேலும், லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப் 2, 2ஏ தேர்வு குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், குரூப்-IV தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன?
இந்தாண்டு குரூப் 2,2ஏ, 4 தேர்வுகள் இடம் பெறாததற்கு இரண்டு முக்கியக் காரணங்களை வேலைவாய்ப்பு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முதலவாதாக, மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் இயக்கத்தினை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் கீழ், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission), டெல்லி காவல்துறை, கேந்திர வித்யாலயா சங்கதன் உள்ளிட்ட முகமைகள் தொடர்ச்சியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்தாண்டு, முழுவதும் தொடர்ச்சியாக மத்திய அரசு ஸ்தாபனங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் சொற்ப அளவிலான நபர்கள் மட்டுமே தேர்வாகின்றி வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்ட வேண்டும் என்ற நோக்கில் கூட இந்தாண்டு குரூப் 2, 4 தேர்வுகளை தமிழ்நாடு அரசு தவிர்த்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் .
இரண்டாவதாக, தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்த இளைஞர்கள்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் வேலைவாய்ப்பின்மை அதிகம் காணப்படுகிறது. அதிகப்படியான பட்ட தாரிகள், அரசு வேலையைப் பெற்றுக் கொள்வதற்காக வேலையற்றிற்கும் நிலையில் உள்ளனர். அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் நிலையிலிருந்து விலகிச் செல்லாமா? வேண்டாமா என்ற குழப்பும் இவர்களிடத்தில் காணப்படுகுறிது. எனவே, இத்தகைய தேர்வர்களை அரசுத் துறைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மையை குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். தனியார் துறைகளால் வேலை தேடுவோருக்கான வேலைவாய்ப்பு முகாமினை தமிழ்நாடு அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதர தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள்:
குரூப் 1, 2,4 தேர்வுகளுக்கு தேர்வுகளுக்கு தயாராகி வரும் மானவர்கள், யூபிஎஸ்சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வது நல்லது. அதேபோன்று, வங்கிப் பணிகளுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 பதவி (RRBs – CRP RRB-XI (Office Assistants) and CRP RRB-XI (Officers)), பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு (IBPS - Clerk Examination), எஸ்பிஐ வங்கி (SBI Bank Clerk Examination), ஐபிபிஎஸ் ப்ரோபேஷனரி ஆபீசர்/மேனேஜ்மென்ட் என பல ஆயிரம் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வங்கித் தேர்வுகள் நடைபெறுகின்றன.
மத்திய அரசுத் துறைகளில் வெளியிடப் பட்டுள்ள சமீபத்திய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் :
மத்திய உள்துறை அமைச்சகத்தில் 1,675 காலியிடங்கள்: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்
எல்ஐசி குழுமத்தில் ரூ.53,000 சம்பளத்தில் 300 காலியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC