முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மறுதேர்வு நடத்த வேண்டும்: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மறுதேர்வு நடத்த வேண்டும்: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு

குரூப் 2 தேர்வுக்கான வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என்றும், தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழ்நாடு தேர்வாணையத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

குரூப் 2 முதன்மைத் தேர்வில் சில குளறுபடிகள் நடந்ததால், மறு தேர்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து தேர்வர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

பிப்ரவரி மாதம் 25ம் தேதி குரூப் 2 முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அப்போது பதிவு எண்கள் மாறியிருந்ததால் தேர்வர்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் தாமதமாக தேர்வு தொடங்கிய மையங்களில், தேர்வர்கள் கூடுதல் நேரம் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.

வினாத்தாள் குளறுபடியால் பதற்றம் ஏற்பட்டு முறையாக தேர்வு எழுதவில்லை என்றும், இதனால் மறுதேர்வு நடத்த வேண்டுமென்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தேர்வர்கள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

India Post GDS Result 2023: வெளியானது அஞ்சல் துறை தேர்வு முடிவுகள்... ரிசல்ட் செக் செய்வது எப்படி?

குரூப் 2 தேர்வுக்கான வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என்றும், தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழ்நாடு தேர்வாணையத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றஞ்சாட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, நாமக்கல், கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பங்கேற்றனர்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC