முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்: திருவாரூரில் நிரந்தர அரசு வேலை - ரூ.50,000 வரை மாதச் சம்பளம்!

8ம் வகுப்பு தேர்ச்சி போதும்: திருவாரூரில் நிரந்தர அரசு வேலை - ரூ.50,000 வரை மாதச் சம்பளம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur, India

Recruitment Panchayat Union Office Assistant: திருவாரூர் மாவட்டம், பஞ்சாயத்து யூனியனில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தது 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களின் விவரம்: 

இனம்வயது (1.07.2022 அன்று)கல்வித் தகுதி
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்)18 - 34 மிகாமல் இருக்க வேண்டும்8ம் வகுப்பு கல்வித் தகுதி
ஆதிதிராவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை அடிப்படையில்)18 -37 மிகாமல் இருக்க வேண்டும்8ம் வகுப்பு கல்வித் தகுதி

பொது நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை நிலை எண். 303, நிதி(ஊதிக்குழு), துறை நாள்: 11.10.2017-ன்படி ரு.15, 700-50,000 (Pay matrix Level1) என்ற ஊதியக்கட்டில் ஊதியமும் மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.03.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய: இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக விளம்பர பலகையிலும், மற்றும் திருவாருர் மாவட்ட இணையதள https://tiruvarur.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs