முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / திருவள்ளூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் வேலை... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

திருவள்ளூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் வேலை... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டி கடைசி நாள் 08.02.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி,திட்ட இயக்குநர்/இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பூந்தமல்லி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் (BMM) மற்றும் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் 1 வட்டார ஒருங்கிணைப்பாளர் (BC) பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார இயக்க மேலாளர்கள் (Block Mission Manager), பூந்தமல்லி ஒன்றியம் 

கல்வித் தகுதிஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.  MS Office படிப்பில் குறைந்த பட்சம் ஆறுமாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி உபயோகம் குறித்த பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
 வயது28 வயதிற்குள் பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்
முன் அனுபவம்மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்
இருப்பிடம்திருவள்ளூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்.

 வட்டார ஒருங்கிணைப்பாளர், திருத்தனி ஒன்றியம்: 

கல்வித் தகுதிஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.  MS Office படிப்பில் குறைந்த பட்சம் ஆறுமாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 வயது28 வயதிற்குள் பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்
முன் அனுபவம்மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்
இருப்பிடம்சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டி கடைசி நாள் 08.02.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி,திட்ட இயக்குநர்/இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள மேற்குறிப்பட்ட வட்டார இயக்க மேலாளர்கள்/ வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரில் அலுவலக பணி நேரத்தில் அல்லது தபால் மூலமாக 08.02.2023க்குள் அனுப்பி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs