மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் பணி நியமனத்திற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்ககப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் மூலமாக பகுதி முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் (Senior Treatment Laboratory Supervisor) ஆய்வுக்கூட நுட்புனர் (Lab Technician), சுகாதார பார்வையாளர் (காசநோய்) (TB Health Visitor) ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுகிறது.
பதவியின் பெயர் | அடுப்படை கல்வி/கூடுதல் தகுதி | காலியிடம் | சம்பளம் |
முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் (Senior Treatment Laboratory Supervisor) | மேல் நிலைப் பள்ளிப்படிப்பு, இளநிலைப்படிப்பு மற்றும் மருத்துவக்கல்விஇயக்குநர் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பட்டம் நிரந்தர இருசக்கர வாகன ஒட்டுநர் உரிமம் மற்றும் கணிணி பயன்பாட்டு முறையில் தேர்ச்சி சான்றிதழ் (குறைந்தபட்சம் 2 மாத காலம்) | 2 | ரூ.19,800/- மட்டும் |
ஆய்வுக்கூட நுட்புனர் (Lab Technician) | மேல் நிலைப் பள்ளிப்படிப்பு தேர்ச்சி, மருத்துவக்கல்வி இயக்குநர் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பட்டம் அல்லது பட்டயம். | 6 | ரூ. 13,000/- மட்டும் |
சுகாதார பார்வையாளர் (காசநோய்) (TB Health Visitor) | மேல்நிலைப்பள்ளி படிப்பு தேர்ச்சி உடன் பல்நோ சுகாதார பணியாளர் அனுபவம் அல்லது உதவிமகப்பேறு]செவிலியர் அனுபவம் அல்லது காசநோய் சுகாதார பார்வையாளர் அனுபவ சான்றிதழ் நிரந்தர இரு சக்கர வாகனம் ஓட்டுநர்* உரிமம் மற்றும் கணிணி பயன்பாட்டு முறை தெரிந்திருத்தல். | 2 | ரூ. 13,300/- மட்டும் |
எனவே தகுதியுடைய நபர்கள் சுய சான்றெப்பமிட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை (கல்வி, சாதிச் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) நகல்களுடன் 23.01.2023 அன்று மாலை 5 மணிக்குள் துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய்மையம், பூவிருந்தவல்லி, சென்னை 600 056. அலுவலகத்திற்க்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.