முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / மாதம் ரூ.60,000 ஊதியம்: திருப்பூர் மாவட்ட மருத்துவமனையில் வேலை

மாதம் ரூ.60,000 ஊதியம்: திருப்பூர் மாவட்ட மருத்துவமனையில் வேலை

காட்சிப் படம்

காட்சிப் படம்

விண்ணப்பங்கள் 08.03.2023 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பதவிக்கான நேர்காணல், 15.03. 2023 அன்று மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் நடைபெறும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur |

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள தர மேலாளர் (Hospital Quality Manager) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்மருத்துவமனை தர மேலாளர் (hospital Quality Manager)
காலியிடங்கள் எண்ணிக்கை1
வயது வரம்பு18 வயது முதல் 45 வயது வரை
கல்வித் தகுதிMaster in hospital Administration(அல்லது)Master in health Management(அல்லது)Master of Public Health
ஊதியம்மாதம் ரூ. 60,000 தொகுப்பூதியம்
பொது நிபந்தனைகள்இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது

திருப்பூர் மாவட்ட www.chengalpattu.nic.in இணையதளத்தில் இருந்து  விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, அனுபவச் சான்று, இருப்பிடம், சாதிச்சான்று, நற்சான்றிதழ், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்  ஆகியவைகளின் நகல்களை கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் 08.03.2023 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பதவிக்கான நேர்காணல், 15.03. 2023 அன்று மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர்- 641 604 ஆகும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs