தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் தற்காலிக பணியிடங்களாகும். ஆர்வமும், தகுதியும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிட விவரம்:
வட்டாரத்தின் பெயர் | காலிப் பணியிடம் |
அம்பாசமுத்திரம் | 1 |
சேரன்மகாதேவி | 3 |
களக்காடு | 2 |
மானூர் | 4 |
பாளையங்கோட்டை | 3 |
பாப்பாக்குடி | 2 |
இராதாபுரம் | 1 |
வள்ளியூர் | 4 |
மொத்தம் | 20 |
வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:-
1. ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தது 3 மாத வகுப்பு முடித்து (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும் (அல்லது) Computer Science அல்லது Computer Application -ல் பட்டப் படிப்பு பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
2. 01.01.2023-ல் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
4. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரார் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய எல்லை பகுதிக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். (Residence in same block).
இதையும் வாசிக்க: அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய அப்டேட்ஸ் இதோ..!
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் (திருநங்கைகள் உட்பட).
விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணி அனுபவ சான்று, கல்விச் சான்று ஆகியவைகளின் நகல் கண்டிப்பாக பதிவேற்றப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
தகுதியில்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. மார்ச் 7 மாலை 5.00 மணி வரை மட்டும் விண்ணப்பபங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.