ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: ரூ.60,000 வரை சம்பளம்- இந்து அறநிலையத் துறையில் வேலை

எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: ரூ.60,000 வரை சம்பளம்- இந்து அறநிலையத் துறையில் வேலை

இந்து அறநிலையத்துறை

இந்து அறநிலையத்துறை

இலை விபூதிபோத்தி விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15900 – 50400 வரை ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

HCRE TN Govt Jobs Notification: நாதஸ்வரம், தவில், தாளம், சுருதி, உதவி அர்ச்சகர், இலை விபூதிபோத்தி உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பொதுவான விவரங்கள்:  நாதஸ்வரம், தாளம், தவில், சுருதி ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்  விண்ணப்பதாரர்கள்,   தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதஸ்வரம் பதவிக்கு சம்பளம்: ரூ. 19500 – 62000 வரை ஆகும். இதர பதவிகளுக்கு ரூ.18500 வரை ரூ. 58600 வரை சம்பளம் ஆகும்.

அதேபோன்று, உதவி அர்ச்சகர் (கீழ்சாந்தி போந்தி) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்றும், அகமப்பள்ளி மற்றும் வேதப் பாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொணடதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15900 – 50400 வரை

இலை விபூதிபோத்தி விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15900 – 50400 வரை ஆகும்.

பொது நிபந்தனைகள்:

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றத்தில் தண்டணை அடைந்தார்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள் பொது ஸ்தாபணங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிறிந்து தண்டணை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவத்தை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 27ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவார். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்- 62016,  தூத்துக்குடி மாவட்டம்.  தொலைபேசி எண்: 04836-242221

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்று அலுவர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும் அசல் சான்றிதழ்கள் அனுப்பகூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur Recruitment Notification

First published:

Tags: Tamil Nadu Government Jobs