முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சைக்கிள் ஓட்டத் தெரியுமா? ரூ.50,000 வரை சம்பளம்... ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை

சைக்கிள் ஓட்டத் தெரியுமா? ரூ.50,000 வரை சம்பளம்... ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை

மிதிவண்டி

மிதிவண்டி

Government Office Job: அலுவலக உதவியாளர், ஜீப்பு ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi) |

Govt office Jobs: தூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர், இரவுக்காவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நியமனம் நடைபெறும்.

காலியிடங்கள்: 

ஊராட்சி ஒன்றியம்காலியிடங்கள்
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்2 அலுவலக உதவியாளர், 1 இரவுக்காவலர்
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்2 அலுவலக உதவியாளர், 1 ஜீப்பு ஓட்டுநர்
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்1 ஜீப்பு ஓட்டுநர், 2 அலுவலக உதவியாளர்
உடன்குடி ஊராட்சி ஒன்றியம்3 அலுவலக உதவியாளர், 1 இரவுக் காவலர்
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம்1 அலுவலக உதவியாளர்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்1 ஜீப்பு ஓட்டுநர், 2 அலுவலக உதவியாளர், 1 இரவுக்காவலர்
கயத்தார் ஊராட்சி ஒன்றியம்2 அலுவலக உதவியாளர்
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்3 அலுவலக உதவியாளர், 1 இரவுக்காவலர்
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்4 அலுவலக உதவியாளர்
புதூர் ஊராட்சி ஒன்றியம்2 அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர், ஜீப்பு ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக்காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:  ஜீப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டியமைக்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள நிலை:  ஜீப்பு  ஓட்டுநர் பணிக்கு ரூ. 19500 முதல் ரூ. 62000 வரை வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும். இரவுக் காவலர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் இருந்தும், தூத்துக்குடி மாவட்ட இணையதளம் thoothukudi.nic.in வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு எதிர்வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் மாலை 5.45 மணி வரை அனுப்பி வைக்க வேண்டும். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் விண்ணப்பப் படிவம்திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்  விண்ணப்பப் படிவம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் , ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்புதூர் ஊராட்சி ஒன்றியம், விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியம் , தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்.


First published:

Tags: Tamil Nadu Government Jobs